வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (10.10.2025 - 16.10.2025)தனுசு: சூரியனை வழிபட்டு வேலைகளைத் தொடர வெற்றி உண்டாகும்.மூலம்: பாக்ய ஸ்தானத்தில் கேது, ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நினைப்பது நடக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பூராடம்: அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. ஒவ்வொரு வேலையையும் யோசித்து செயல்படுவது நல்லது. லாப செவ்வாய், புதனால் சங்கடம் விலகும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: சூரியன், செவ்வாய், புதன், ராகு கிரகங்கள் கனவுகளை நனவாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாழக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 14.10.2025 காலை 11:59 மணி - 16.10.2025 மாலை 5:07 மணி