உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )தனுசு: திருச்செந்துார் முருகனை வழிபட்டுவர வேலைகளில் வெற்றி உண்டாகும்.மூலம்: பாக்ய கேதுவால் தெய்வபலம் கூடும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் முன்னேற்றம் அடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். ஞாயிறு திங்கள் அன்று வேலைகளில் நிதானம் தேவை.பூராடம்: சுக்கிரன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சந்தோஷம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். எடுத்த வேலை நடக்கும். திங்கள் செவ்வாய் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: திடீர்  என்று குழப்பம் ஏற்பட்டாலும் சனி, ராகு, சுக்கிரன், புதன் சாதகமாக சஞ்சரிப்பதால்  கனவு நனவாகும். எடுக்கும் முயற்சி லாபத்தை தரும். வியாபாரத்தில் ஆதாயம் கூடும். இழுபறியாக இருந்த வேலை முடியும். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 4.1.2026 மதியம் 12:07 மணி - 6.1.2026 மாலை 4:40 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !