/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (23.1.2026 - 29.1.2026)தனுசு: பக்த ஜனேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: பாக்ய கேதுவால் திறமை வெளிப்படும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். பண வரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.பூராடம்: உங்கள் லாபாதிபதி தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். வேலையில். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு கூடுதல் லாபம் வரும். உத்திராடம் 1: சனி, ராகு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை வெற்றியோடு முடிப்பீர். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.