வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (30.1.2026 - 5.2.2026)தனுசு: மீனாட்சி அம்மனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.மூலம்: பாக்ய ஸ்தான கேது, சகாய ஸ்தான ராகுவால் நம்பிக்கை அதிகரிக்கும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். சனி, ஞாயிறில் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.பூராடம்: சுக்கிரன், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பொன் பொருள் சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலை நடக்கும். ஞாயிறு திங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்திராடம் 1: சூரியன் உங்கள் மனதில் குதுகுலத்தை உண்டுபண்ணுவார். சனி ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் நேற்றைய கனவு நனவாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் லாபம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். திங்கள் கிழமை வேலைகளில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: 31.1.2026 இரவு 8:14 மணி - 3.1.2026 அதிகாலை 12:32 மணி