உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)தனுசு: காளிகாம்பாளை வழிபட்டுவர உங்கள் வாழ்க்கை வளமாகும்.மூலம்: முயற்சிகள் வெற்றியாகும் வாரம் இது. பாக்ய கேதுவால் விஐபிகள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம்வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பூராடம்: லாபாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்.உத்திராடம் 1: பாக்யாதிபதி சூரியன் தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், சனி, ராகு, சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் கனவு நனவாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் லாபம் அடையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !