/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (13.2.2026 - 19.2.2026)தனுசு: வடாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: நினைத்த வேலை நடக்கும். தெய்வ அருளும் பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.பூராடம்: குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.உத்திராடம் 1: தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். கையில் பணம் புழங்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.