உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)தனுசு: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். திறமை வெளிப்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கனவு நனவாகும். முதலாளிகளுக்கு ஆதாயம் கூடும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் மேன்மை அடையும்.உத்திராடம் 1: அரசுவழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எடுத்த வேலைகளை வெற்றியோடு முடிப்பீர். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !