வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )தனுசு: சனீஸ்வரரை வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.மூலம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பூராடம்: உறவினர் ஆதரவு உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல் நிலையில் கவனம் தேவை.உத்திராடம் 1: பாக்யாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். நேற்றைய கனவு நனவாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் லாபம் அடையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.