வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (10.4.2026 - 16.4.2026)தனுசு: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும், மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: ஐந்தாமிட சுக்கிரனால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், சேமிப்பு உயரும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் எடுத்த வேலை நடந்தேறும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.உத்திராடம் 1: சுக ஸ்தானத்தில் சனி, செவ்வாய், திங்கள்கிழமை வரை சூரியன் சஞ்சரிப்பதால், உங்கள் வேலைகளில் மந்த நிலை இருக்கும் என்றாலும் சகாய ஸ்தானத்தில் ராகு, சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.