உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன் (17.4.2026 - 23.4.2026)தனுசு: ஆலங்குடி குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: சகாய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். தடைபட்ட வேலை முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும்.  எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். சேமிப்பு உயரும். எடுத்த வேலை நடக்கும்.உத்திராடம் 1: சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலை நடக்கும். சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !