வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)தனுசு: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: பாக்ய ஸ்தானத்தில் கேதுவும், பாக்ய ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் விஐபிகள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வெள்ளி அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.பூராடம்: ராசிநாதன் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப உங்கள் நிலை உயரும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு திருமணம், சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வெள்ளி சனிக்கிழமையில் நிதானம் அவசியம்.உத்திராடம் 1: சூரியன் உடல்நிலையில் சிறு சங்கடத்தையும், மனக்குழப்பத்தையும் ஏற்படுத்துவார். சகாய ராகுவும் குரு பார்வைகளும் உங்களைப் பாதுகாக்கும். முயற்சி வெற்றியாகும். சனிக்கிழமை சில சங்கடம் தோன்றும். நிதானம் அவசியம்.சந்திராஷ்டமம்: 23.4.2026 இரவு 8:04 மணி - 25.4.2026 இரவு 11:52 மணி