வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)தனுசு: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: ராகு பகவான் எடுத்த வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். தடைபட்ட வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.பூராடம்: மனதில் குழப்பமும் சஞ்சலமும் அதிகரிக்கும். சிலர் எதிர்பாலினரால் சங்கடத்திற்கு ஆளாவீர். சிலர் காதல் வலையில் சிக்குவர். மற்றவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போகும். கவுரவத்திற்கு சோதனை உண்டாகும் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: சூரியபகவானால் சங்கடம் விலகும். போராட்டநிலை மாறும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.