/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (5.6.2026 - 11.6.2026)தனுசு: அகோரமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.பூராடம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ராசிநாதன் குரு மறைவு பெறுவதால் அறிவாற்றல் மங்கும். வெளுத்ததை எல்லாம் பால் என்று நம்புவீர். சிலரால் சங்கடம் உண்டாகும். உங்கள் கவுரவத்திற்கு சோதனை ஏற்படும்.உத்திராடம் 1: சத்ரு ஜெய ஸ்தான சூரியன் உங்களுக்கிருந்த சங்கடங்களை போக்குவார். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.