உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )தனுசு: குல தெய்வத்தை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: ராகு, கேதுவால் எடுக்கும் வேலை வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதன் வியாழன் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.பூராடம்: தவறான நட்பில் இருந்து வெளியில் வருவீர். மீண்டும் செல்வாக்கு உயரும். வியாபாரம் தொழிலில் கவனம் செலுத்துவீர். வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரின் புகழ் கூடும்.சந்திராஷ்டமம்: 17.6.2026 மதியம் 12:26 மணி - 19.6.2026 மதியம் 3:57 மணி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !