/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )தனுசு: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: ராகு பகவான் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். செவ்வாய் தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வம்பு வழக்குகளை வெற்றியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார்.பூராடம்: நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சிலர் வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு சென்று வருவீர்.உத்திராடம் 1: சூரியன் எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். சிலருக்கு வேலையின் காரணமாக தனித்தனியாக வாழவேண்டிய நிலை உருவாகும். வியாபாரம் தொழில் வளர்ச்சிப்பாதையில் செல்லும்.