/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)தனுசு: நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். உழைப்பிற்கும் முதலீட்டிற்கும் ஏற்ற லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.பூராடம்: அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தம்பதிக்குள் இணக்கம் இருக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வீண் செலவு குறையும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.உத்திராடம் 1: சப்தம சூரியனால் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். செவ்வாய் பகவான் உங்கள் திறமையை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வழக்கு சாதகமாகும்.