உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)தனுசு: அகோரமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: பெரியோர் ஆதரவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும்.பூராடம்: தொழில் முன்னேற்றம் அடையும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய வாகனம் என்ற கனவு நனவாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.உத்திராடம் 1: சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். உழைப்பு அதிகரிக்கும். புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திட்டமிட்ட வேலை நடக்கும்.  எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !