வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (4.9.2026 - 10.9.2026)தனுசு: நவகிரகத்தை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பம், தொழிலில் நிம்மதி உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பொறுமை அவசியம்.பூராடம்: லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் பொன், பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி மறையும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்திராடம் 1: சூரியனால் அரசு பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நெருக்கடி நீங்கும். புதன்கிழமை நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 7.9.2026 மதியம் 12:57 மணி - 9.9.2026 மாலை 4:04 மணி