வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (18.9.2026 - 24.9.2026)தனுசு:அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.மூலம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வம்புகளில் இருந்து விடுதலைக் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூராடம்: பண வரவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நவீன பொருள்கள் சேரும். மனக்குழப்பம் விலகும். வீண் செலவு குறையும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். ஆரோக்கியம் மேம்படும்.உத்திராடம் 1: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் தேடிவரும். வியாபாரிகளுக்கு நிலைமை சீராகும். வருவாய் உயரும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும்.