உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )தனுசு: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மூலம்: செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.பூராடம்: பணவரவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நவீன பொருட்கள் சேரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.உத்திராடம் 1: எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் தேடிவரும். வியாபாரிகளுக்கு வருவாய் உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !