/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (24.10.2025 - 30.10.2025)விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.அனுஷம்: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உழைப்பு அதிகரிக்கும். எதிலும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.கேட்டை: விரய ஸ்தானத்தில் புதன், சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் ஏற்படும். திங்கள் முதல் குரு மங்கள யோகம் உண்டாவதால் கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும்.