வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (20.6.2025 - 26.6.2025)விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். செலவு கட்டுப்படும். துாக்கமில்லாமல் தவித்த நிலை மாறும். நிம்மதி உண்டாகும். சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். புதிய சொத்துகள் வாங்குவீர். புதன்கிழமை நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.அனுஷம்: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகு உடல், மனம், தொழில், உத்தியோகம், வேலைகளில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். குருவின் பார்வையால் மனதில் நிம்மதி உண்டாகும். புதன் வியாழனில் அனைத்திலும் கவனம் தேவை.கேட்டை: வாரத்தின் தொடக்கத்தில் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எந்தவிதமான சங்கடம் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணம் வரும். புதிய சொத்து சேரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 25.6.2025 அதிகாலை 12:14 மணி - 27.6.2025 அதிகாலை 4:13 மணி