/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குருவின் பார்வையால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்கியம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.அனுஷம்: சனி வக்கிரம், அங்கு ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சங்கடமும், அலைச்சலும் ஏற்படும். ஞாயிறு முதல் குரு பார்வையால் நிம்மதி உண்டாகும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். வருமானம் உயரும். நிம்மதியாக துாங்கும் நிலை உண்டாகும்.கேட்டை: புதன் வக்கிரம், அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. எதிரி கை ஓங்கும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசுவழியில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.