வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (26.9.2025 - 2.10.2025)விருச்சிகம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குரு பார்வை செலவுகளை கட்டுப்படுத்தும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்யம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். நிம்மதியான துாக்கம் இருக்கும்.அனுஷம்: லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் புதன், சூரியனும் இணைந்து வருமானம் அதிகப்படுத்துவார்கள். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். டெபாசிட் செய்திருந்த பணம் வட்டியுடன் திரும்ப வரும்.கேட்டை: குரு பார்வை செவ்வாய் மீது படுவதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். புதன் உச்சமாக சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட பணம் தாமதம் இல்லாமல் வரும். இதுவரை இருந்த நெருக்கடி குறையும்.