வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (10.10.2025 - 16.10.2025)விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: பாக்ய குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கடன் தொல்லை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.அனுஷம்: விரய ஸ்தானத்தில் ராசிநாதன், சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து நெருக்கடியை ஏற்படுத்துவார். லாப ஸ்தான சூரியனால் சங்கடம் விலகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை நீங்கும். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். ஞாயிறு திங்களில் அனைத்திலும் கவனம் தேவை.கேட்டை: விரய ஸ்தானத்தில் புதனும் செவ்வாயும் சஞ்சரிப்பதால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். பாக்ய குருவும் லாப சூரியனும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணப் புழக்கத்தை உண்டாகும். திங்கள் செவ்வாயில் கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 12.10.2025 காலை 8:35 மணி - 14.10.2025 காலை 11:58 மணி