/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம் இது. தொழிலில் அக்கறை அதிகரிக்கும். மனத்தயக்கம் விலகும். செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலை நடக்கும்.அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். ஆதாயம் உண்டு. பண நெருக்கடி விலகும். வேலையில் துணிச்சலாக இறங்கி லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து சேரும்.கேட்டை: கமிஷன் ஏஜென்சி, ஷேர் மார்க்கெட் வேலைகளில் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். வேலை பளுவின் காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆரோக்யத்தில் கவனம் தேவை. தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.