/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: உங்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனிக்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.அனுஷம்: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி விலகும். வேலை, தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். போட்டி, வழக்கு, எதிர்ப்பு என்று இருந்த நிலை மாறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். சனி ஞாயிறில் கவனம் தேவை.கேட்டை: செல்வாக்கு வெளிப்படும். பண நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். ஞாயிறு திங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 6.12.2025 அதிகாலை 12:49 மணி - 8.12.2025 அதிகாலை 3:55 மணி