வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (26.12.2025 – 1.1.2026)விருச்சிகம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடக்கும்.விசாகம் 4: அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்துள்ள குருவால் உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். உங்கள் செல்வாக்கு உயரும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.அனுஷம்: நான்காமிட சனி ராகுவால் உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சங்கடத்தில் சிக்கித்தவித்து வந்த நிலைமாறும். எடுக்கும் வேலையில் துணிச்சலாக இறங்கி ஆதாயம் காண்பீர். பொருளாதார நிலை உயரும்.கேட்டை: புதன், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் கமிஷன் ஏஜென்சி, ஷேர் மார்க்கெட் லாபம் தரும். வியாபார ரீதியாக ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.