வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )விருச்சிகம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: வக்கிர குருவால் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.அனுஷம்: சனியின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் துாண்டிலில் சிக்கிய மீன்போல் தவிப்பீர். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். வியாபாரத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். வெள்ளி சனி அன்று அனைத்திலும் கவனம் தேவை.கேட்டை: புத ஆதித்ய யோகத்தால் செல்வாக்கு வெளிப்படும். வரவேண்டிய பணம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சேமிப்பு உயரும். சனி ஞாயிறு அன்று கவனமாக செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: 2.1.2026 காலை 9:04 மணி - 4.1.2026 மதியம் 12:06 மணி