வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (30.1.2026 - 5.2.2026)விருச்சிகம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.விசாகம் 4: வக்கிர குரு உங்கள் வாழ்வை வளமாக்குவார். குடும்பத்தில் குழப்பம் விலகும்.நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணவரவு திருப்தி தரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல்நிலையில் எப்போதும் கவனம் தேவை. சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆதாயத்தை அதிகரிப்பார். உடல்நிலையை சீராக்குவார். வெள்ளிக்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.கேட்டை: புத்திசாலித்தனத்தை புதன் அதிகரிப்பார். எடுத்த வேலைகளை முடிப்பீர். உங்கள் ஜீவனாதிபதி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 29.1.2026 மாலை 5:19 மணி - 31.1.2026 இரவு 8:13 மணி