வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடங்கள் விலகும்.விசாகம் 4: நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டிய வாரமிது. குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும்.எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.அனுஷம்:உழைப்பு அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் ஏற்படும். பாதியில் நின்றுபோன வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உடலும் மனமும் சோர்வடையும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.கேட்டை: உங்கள் புத்திசாலித்தனத்தால் எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: 26.2.2026 அதிகாலை 1:23 மணி - 28.2.2026 அதிகாலை 4:10 மணி