/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (10.4.2026 - 16.4.2026)விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குரு பார்வை விரயம் மற்றும் தன குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் ஆரோக்கியம் மேம்படும், வீண் செலவு குறையும், தேவையான அளவிற்கு பணம் வரும், குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும், சிலருக்கு புதிய சொத்து சேரும்.அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகி விட்டதால் உங்களிடம் இருந்த மந்தநிலை மாறும், எடுக்கும் வேலை விறு விறுவென நடந்தேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: புதன், சனி, செவ்வாய் என ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் நிதானம் வேண்டும், புதிய முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும் என்பதுடன் பண வரவிலும் தடை ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை.