வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (17.4.2026 - 23.4.2026)விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும், சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குரு பார்வைகளால் வீண் செலவு குறையும், குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செவ்வாய்க்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகி இருக்கிறார். சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சி வெற்றியாகும், புதன் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.கேட்டை: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பண வரவிலும் தடை ஏற்படும். நெருக்கடி அதிகரிக்கும். அனைத்திலும் கவனம் தேவை. வியாழன் அன்று வேலைகளில் விழிப்புணர்வு தேவை.சந்திராஷ்டமம்: 21.4.2026 மாலை 5:24 மணி - 23.4.2026 இரவு 8:02 மணி