உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

 வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.அனுஷம்: திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர். சிலருக்கு புதிய சொத்து சேரும். சப்தம சூரியனால் உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் வசதியான இடத்திற்கு தங்கள் தொழிலை மாற்றம் செய்து கொள்வீர்.கேட்டை: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் கவலைகளைப் போக்குவார். பண வரவை அதிகரிப்பார். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !