/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )விருச்சிகம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.விசாகம் 4: பாக்ய குருவால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பட்டம் பதவிகள் தேடி வரும்.அனுஷம்: சனி பகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். போராட்டநிலை மாறும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.கேட்டை: புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் வேலைகளில் நிதானம் தேவை. பத்திரம், பாண்டுகளில் கையெழுத்திடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது நல்லது. வரவேண்டிய பணம் இழுபறியாகும். ஒப்பந்தம் தள்ளிப் போகும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்.