/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (17.7.2026 - 23.7.2026)விருச்சிகம்: குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: உங்களுக்கிருந்த சங்கடம், பிரச்னை, போராட்டம் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.அனுஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாவதுடன் எதிர்பார்த்த பணமும் வரும். குல தெய்வ ஆலயத்திற்கு சென்று பொங்கல் வைப்பீர்.கேட்டை: புதனால் வரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் தேடி வரும். தொழிலை விரிவு செய்வீர். வீடு கட்டுவதற்காகவும் வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்.