/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (24.7.2026 – 30.7.2026)விருச்சிகம்:ஜம்புகேஸ்வரரை வழிபட சகல காரியங்களும் சித்தியாகும்.விசாகம் 4: உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலையில் முன்னேற்றம் காண்பீர். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.அனுஷம்: சனி வக்கிரம் அடைந்திருப்பதால் நெருக்கடி குறையும். போராட்ட நிலை மாறும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி பலன் தரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட விவகாரம் முடியும்.கேட்டை: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.