உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)விருச்சிகம்: திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து வேண்டுதல் செய்ய சங்கடங்கள் நீங்கும்.விசாகம் 4: பாக்ய குருவால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.அனுஷம்: நீண்ட நாட்களாக முயற்சித்தும் முடிக்க முடியாத வேலைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கிருந்த போராட்டநிலை மாறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட விவகாரங்கள் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும்.கேட்டை: பத்தாமிட புதனும் சூரியனும் உங்கள் நிலையை உயர்த்துவர். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !