உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)விருச்சிகம்:வீரட்டேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.விசாகம் 4:பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் வாழ்வை வளமாக்கும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை உண்டாக்கும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் பேசியும் முடிவிற்கு வருவீர்கள். புதிய முயற்சியும், முதலீடும் லாபம்தரும்.அனுஷம்:சனி பகவான் வக்கிரம் அடைந்திருக்கும் நிலையில் குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை:ராசியாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் ஜீவன ஸ்தானத்தில் புதன், சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். மறைமுகத் தொல்லைகள் விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !