வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (4.9.2026 - 10.9.2026)விருச்சிகம்: குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.விசாகம் 4: பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். செல்வாக்கை அதிகரிக்கும். எடுத்த வேலையை வெற்றியாக்கும். இடம், வீடு, வாகனம் என விருப்பம் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு, பதவி தேடி வரும். அனுஷம்: சனி வக்கிரம் அடைந்து உக்கிரமாக சஞ்சரித்தாலும் குருபார்வையால் குழப்பம் விலகும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். கேட்டை: லாப ஸ்தானத்தில் புதன், ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி பெறும். புதிய முயற்சி வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு நிம்மதி உருவாகும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். சந்திராஷ்டமம்: 5.9.2026 காலை 10:34 மணி - 7.9.2026 மதியம் 12:56 மணி