வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )விருச்சிகம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்.விசாகம் 4: பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையை உயர்த்துவார். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்களை விலக்குவார். வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை நீக்குவார். புதிய இடம் வீடு வாங்கும் கனவை நனவாக்குவார். திருமண வயதினருக்கு வரன் வரும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.கேட்டை: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் தொழில் ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்.