உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)விருச்சிகம்: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.விசாகம் 4: பாக்ய குருவால் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். இடம், வீடு, வாகனம் என்ற விருப்பம் நிறைவேறும். அரசியல் வாதிகளுக்கு பொறுப்பும் பதவியும் தேடிவரும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது அவசியம்.அனுஷம்: சனி வக்கிரமாக சஞ்சரித்தாலும், குருபார்வையால் மன குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சனிக்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.கேட்டை: லாப ஸ்தானத்தில் ஜீவனாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை லாபம் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.சந்திராஷ்டமம்: 2.10.2026 மாலை 6:37 மணி - 4.10.2026 இரவு 8:56 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !