தகவல் சுரங்கம்
உலக சாரணர் தினம்
சாரணர் இயக்கத்தை தொடங்கிய பிரிட்டனின் ராபர்ட் பேடன் பவுலின் பிறந்த நாள் (பிப்.22) உலக சாரணர்தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் 1876ல் பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்தார். 1907ல் 20 மாணவர்களுடன் சாரண இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின் இது உலகம் முழுவதும் பரவியது. நாட்டுப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை உள்ளிட்ட பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். சாரணர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஸ்கவுட் மாஸ்டர், ஆசிரியைகள் 'கைடு கேப்டன்' என அழைக்கப்படுகின்றனர்.