உள்ளூர் செய்திகள்

புற்றுநோய்க்கு காரணம் உப்பா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அதிகளவில் ஏற்படும் புற்று நோய் வகைகளில் ஐந்தாம் இடத்தில் இருப்பது இரைப்பைப் புற்றுநோய். கிழக்காசிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டு வந்த இந்தப் புற்றுநோய் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளிலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக, 50 வயதுக்குட்பட்டவர்களிடம் இந்நோய் அதிகரித்து வருவதால், இதுகுறித்த ஆய்வில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த வியன்னா பல்கலை இறங்கியது.உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்ப்பது டிமென்ஷியா, டைப்-2 நீரிழிவு ஆகியவற்றை அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில ஆய்வுகளில் அதிக உப்பு இரைப்பையில் உள்ள பாதுகாப்புப் படலத்தைச் சேதமாக்குவதாகவும், சேதமான இடத்தில் ஹெலிக்கோபேக்டர் பைலோரி பாக்டீரியா வளர்ந்து புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் சில ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.இந்த ஆய்வறிக்கைகளைப் படித்த பின்னர் தனி ஆய்வு ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். நடுத்தர வயதுடைய 4,71,144 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களின் சராசரி வயது 56. அவர்களில் 53.9 சதவீதம் பெண்கள். அவர்கள் அன்றாட உணவில் எவ்வளவு உப்பு சேர்த்துக் கொள்கின்றனர் என்று கண்காணிக்கப்பட்டது. குறைவாகச் சேர்ப்பவர்கள், மிதமாகச் சேர்ப்பவர்கள், அதிகம் சேர்ப்பவர்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். ஆய்வின் இறுதியில் அதிகமான உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்குப் பிறரை விட இரைப்பைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 41 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. உணவில் சேர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பான உப்பு அளவு என்ன என்பது குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath Kumar
மே 17, 2024 09:48

உப்பு உப்பில்லா பண்டம் குப்பையில் இது முது மொழி உப்பு கண்டிப்பாக தேவை அனால் அளவு முக்கியம் அது அத்தியாகும் ஆகி விட்டால் அதை சரிஸ்ய உண்ணாவில் நாம் துவர்ப்பு சதை சேர்த்து விடுவோம் அது சமன் படுத்த படும் ஆனல் தற்புது நிலை எல்லாம் சரிகை உப்பு மற்றும் மற்ற பட்ட உணவு பழக்க வழக்கங்கள் இதனில் தான் பாதிப்பு பாண்டிய உண்ணவோ முறையை பின்பற்றினால் வியாதி வாராது யாரு கேக்குறான் பெண்கள் சமைப்பதை விட்டு விட்டார்கள் பாரம்பரியம் பறந்து போயாச்சு டாக்டர் ஹாஸ்பிடல் வியாதி பாஷாண ஆகி போனது நல்லானுபவிங்கோட