உள்ளூர் செய்திகள்

ரை மகரந்தம் புற்று நோய்க்கு மருந்தாகுமா?

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்த புதிர் அது. 'ரை' (Rye) புற்களின் மகரந்தச் சாறு புற்றுநோய் வளர்ச்சியை எப்படி தடுக்கிறது என்பது உயிரியலாளர்களுக்குப் பிடிபடாமல் இருந்தது. இதை புற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்த முடியும். என்றாலும், அதற்கு காரணமான வேதியியல் மூலக்கூறு கட்டமைப்புகள் தெரியாததால் அது குறித்த ஆய்வு தேக்கமடைந்தது. பேராசிரியர் கார்ல் ஏ. ஷெய்ட் தலைமையிலான நார்த்வெஸ்டர்ன் பல்கலை ஆய்வாளர்கள், தற்போது 'செகலோசைட்ஸ் 'ஏ' மற்றும் 'பி' என்ற அந்த வேதிப்பொருட்களின் துல்லியமான முப்பரிமாணக் கட்டமைப்பை வரைபடமாக்கியுள்ளனர். ஆய்வகத்தில் இந்த மூலக்கூறுகளை உருவாக்கி, அவற்றின் வடிவ அமைப்பை உறுதிப்படுத்தி உள்ளனர். இப்படிச் செய்தால்தான் அவற்றின் மருத்துவ வீரியத்தைத் தீர்மானிக்க முடியும். தற்போது அடிப்படை வரைபடம் கிடைத்திருப்பதால், புற்றுநோய் ஆய்வாளர்கள் இனி இந்த மூலக்கூறுகளின் செயல்பாடுகளை ஆழமாக ஆராய முடியும். வெறும் தாவரவியல் புதுமையாகக் கருதப்பட்ட இந்த ஆய்வு, வருங்காலப் புற்றுநோய் மருந்து வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !