உள்ளூர் செய்திகள்

வளைந்துகொடுக்கும் அலுமினிய பேட்டரிகள்

இந்தியாவிலும் பேட்டரி தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி, வேகமாக நடக்கிறது. பரவலாக லித்தியம் அயனி பேட்டரிகளுக்கு வேண்டிய லித்தியம் உலோகம், பெரும் வர்த்தகப் போரை சந்தித்து வருகிறது. எனவே, இந்தியாவிலேயே கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு, செறிவான மின்கலன்களை உருவாக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அண்மையில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் ஆய்வாளர்கள் அலுமினிய அயனி பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த புதுமை மின்கலன்,வளைத்தா லும், சுருட்டினாலும், மடித்தாலும், இயங்கும் தன்மை கொண்டது என்பது கூடுதல் சிறப்பு. நீர் சார்ந்த மின்பகுளியைக் (electrolyte) கொண்டுள்ள இந்த மின்கலன், 150 முறை மின்னேற்றம், மின்னிறக்கம் செய்த பிறகும், 96 சதவீதத்திற் கும் அதிகமான மின்னாற் றலை சேமித்து வைக்கிறது. சோதனைகளில், இதை மடக்கி வைத்த பிறகும், ஒரு எல்.சி.டி., திரைக்கு வேண்டிய மின்சாரத்தை தொடர்ந்து வழங்கியது. இந்தக் கண்டுபிடிப்பு, மின்கலன் நுட்பத்தின் இரண்டு முக்கிய குறைகளுக்கு தீர்வு காண்கிறது. ஒன்று பாதுகாப்பு. இன்னொன்று சுற்றுச் சூழலுக்கு இணக்கமான தன்மை. லித்தியத்துடன் ஒப்பிடுகையில், அலுமினியத்தில் இவை கூடுதலாகக் கிடைக்கிறது. மேல ும், அலுமினிய மின்கலன் தீ விபத்துகளை ஏற்படுத்துவதில்லை. இதில் உள்ள நீராலான மின்பகுளி, சுற்றுச்சூழல் கேட ுகளை நீக்குகிறது. தற் போது லித்தியம்- அய ன ி மின ்கலன்கள் ஆதி க்கம் செலுத்தும் நிலையில், இந்த மாற்றுத் தொழில்நுட்பம், மின்கலன் பயன்பாட்டை பரவலாக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !