உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. சிரியஸ் (Ceres) என்பது செவ்வாய் கோளுக்கும், வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குறுங்கோள். அமெரிக்காவின் நாசா அனுப்பிய டான் (Dawn) விண்கலம் தந்த தகவல்களில் இருந்து, ஒரு காலத்தில் இந்தக் குறுங்கோளில் 90 சதவீதம் பனிக்கட்டிகள் இருந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

02. சுத்தியல் தலை சுறா மீன்களில் ஒரு புதிய இனத்தை ப்ளோரிடா பல்கலை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸ்பைன்ரா அல்லெனி (Sphyrna alleni) என்று பெயரிடப்பட்டுள்ள இது, 1.5 மீ., நீளமே வளரும். 03. கடல் ராபின்கள், ஒருவகை மீன்கள். இவற்றுக்கு கால் போன்ற அமைப்பு இருக்கும். அவை கடல் தரையில் நடப்பதற்காக ஏற்பட்டவை என்றே நம்பப்பட்டு வந்தன. தற்போது, விஞ்ஞானிகள் இவை கடல் தரையில் புதைந்திருக்கும் தங்கள் இரையைக் கண்டறியவும் உதவுகின்றன என்று கண்டுபிடித்துள்ளனர். 04. நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரங்களுள் ஒன்று பர்னார்ட்ஸ் நட்சத்திரம். சிவப்பு குள்ள நட்சத்திரமான இதை ஒரு கோள் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நமது வெள்ளிக் கோளில் பாதி நிறையை உடையது. 05. இஸ்ரேல் நாட்டுப் பாலைவனத்தில் 1980களில் ஒரு விதையை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 2010ம் ஆண்டிலிருந்து அதை வளர்க்க முயன்றனர். ஆயிரமாண்டுகள் பழைய இந்த விதை தற்போது முளைத்துச் செடியாக வளர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !