உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. கியூபா நாட்டின் மழைக்காடுகளில் ஒரு புதிய இனத்தைச் சேர்ந்த தேளை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு டிட்யாப்சிஸ் ரொலண்டாய் (Tityopsis rolandoi) என்ற அறிவியல் பெயர் வைத்துள்ளனர். 1 அங்குல நீளம் மட்டுமே இது வளரும். இதற்கு எட்டு கண்கள் உண்டு. இந்த இனத்தில் ஆண் தேளை விடப் பெண் தேள் பெரிதாக இருக்கும்.

02. ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், அமெரிக்கா தனது வரலாற்றில் முதன்முறையாக இவற்றை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. 03. அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் 12,800 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வால் நட்சத்திரத்தின் சிறு பகுதி விழுந்து உள்ளது. இதனால் பூமியில் வெப்பநிலை அதிகரித்துப் பல உயிர்கள் அழிந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 04. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தினமும் சிறிதளவு பாதாம், முந்திரி, வேர்க்கடலை முதலிய பருப்பு வகைகளை உட்கொண்டால் இதய நோய், ஞாபகமறதி, புற்றுநோய் உடல் பருமன், நீரிழிவு ஆகிய நோய்கள் வராமல் காக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 05. சீனாவைச் சேர்ந்த எஸ்.யு.எஸ்.டி., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரவு நேரம் செயற்கை வெளிச்சத்தில் இருப்பதற்கும் தூக்கமின்மைக்குமான தொடர்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிகமான செயற்கை வெளிச்சம் பயன்படுத்தப்படுகின்ற நகரங்களில் தான் தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகளும் அதிகம் உள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ambika Ilayaraj
டிச 04, 2024 19:50

எல்லாம் இயற்கையின் அற்புதமான படைப்பு, பலவற்றை நமக்கே தெரியாமல் கடந்து செல்கிறோம்... இந்த இதழ் சிந்தனை துளிகள் என எண்ணி மகிழ்கிறேன்?