ADDED : மார் 07, 2024 07:45 AM | ADDED : மார் 07, 2024 07:45 AM
01. அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra processed food) தொடர்ந்து உண்பது, இதயம் தொடர்பான நோய்களை 50 சதவீதமும், நீரிழிவை 12 சதவீதமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் இவற்றால் மன அழுத்தமும் 22 சதவீதம் அதிகரிப்பதாக அதிர்ச்சி தருகின்றனர் ஆய்வாளர்கள்.
02. ஐரோப்பிய வானியல் ஆய்வு மையத்தால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்டது மார்ஸ் எக்ஸ்பிரஸ். இது, சமீபத்தில் செவ்வாய் கோளின் வடதுருவத்தைப் படமெடுத்து அனுப்பி உள்ளது. இது பார்ப்பதற்கு பாலைவனம் போல மணல் குன்றுகளால் நிறைந்துள்ளது.
03. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுவது முழங்கால் கீல்வாத நோய். இதைச் சரி செய்ய மூக்கில் உள்ள இணைப்புத் திசுக்களைப் பயன்படுத்த முடியும் என, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெ.எம்.யூ., பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
04. ஜப்பானின் டிசுகுபா (Tsukuba) பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், முடியின் வேரிலிருந்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஜெல் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது கெரடின் நானோ துகள்களாலானது