உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

1. 94 வகையான குரங்கு இனங்களை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், அவற்றின் மூளையின் ஒரு பகுதியான நியோகோர்டெக்ஸ் (neocortex), கைகளின் இயக்கத்திறன் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்தே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்று கண்டறிந்தனர்.

2. ஒளி மாசுபாடு அதிகமான இடங்களில் உள்ள பறவைகள், மாசுபாடு இல்லாத இடங்களில் உள்ள பறவைகளை விட தினமும் கூடுதலாக 50 நிமிடங்கள் பாடுகின்றன என்று பறவையியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கான காரணங்களை அறிய, ஆய்வுகளைத் தொடர்ந்து வருகின்றனர். 3. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை, சராசரியாக 64 வயதுடைய 107 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், பக்கவாதம் ஏற்பட்ட பிறகும் கூட ஏரோபிக் பயிற்சிகள் தொடர்ந்து செய்பவர்களுக்கு மூளை ஆரோக்கியம் மேம்படும் என்று கண்டறிந்துள்ளது. ஏரோபிக் பயிற்சி என்பது நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி என இதயத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்தும் பயிற்சிகளின் பொதுப் பெயர். 4. பூமியிலிருந்து 5.1 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் NGC 7456 எனும் கேலக்ஸியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த புகைப் படத்தின் மூலம், அங்கே நட்சத்திரங்கள் உருவாகி வருவது தெரிய வந்துள்ளது. 5. பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்து வருவதால், வெப்ப மண்டல காடுகளில் வாழும் பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாகக் குறைந்து வருவதாக ஹாங்காங் பல்கலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !